மழலைகள் வளர்ந்திடும் சூழல்
குறை கூறம் சூழலில் வளர்ந்தால் -
அனைவரையும் குறை கூற கற்றிடும்
எதிர்ப்புடன் வளரும் சூழல் -
சண்டையிடும் எண்ணமும் வளரும்
பயத்துடன் வளரும் சூழல் -
தயக்கமும் பதற்றமும் பற்றிக் கொள்ளும்
அனுதாபத்துடன் வளரும் மழலை -
பிறரின் பச்சாபதத்தை எதிர்நோக்கும்
பொறாமையுடன் வளரும் சூழல் -
பழிஉனர்வு தானே வளரும்
ஊக்குவித்தலுடன் வளரும் மழலை -
தன்னம்பிக்கையுடன் வளரும்
சகிப்ப்புத் தன்மையுடன் வளர்ந்தால் -
பொறுமையாய் இருந்திட பழகிடும்
புகழ்ச்சியின் சூழலில் வளர்ந்தால் -
பிறரை புகழ கற்றுக் கொள்ளும்
அனைவரையும் ஏற்றுக்கொண்டால் -
அனைவரிடமும் அன்பு செலுத்தும்
எவரிடமும் குறை காணாத மழலை -
பிறரிடம் பிரியத்தைக் காட்டும்
அங்கீகாரத்துடன் வளரும் மழலை -
குறிக்கோளை அடைய கற்றுக் கொள்ளும்
தூய்மையுடன் வளரும் மழலை -
வாய்மையுடன் வாழ கற்றுக் கொள்ளும்
பாதுகாப்புடன் வளரும் மழலை -
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும்
நட்புறவுடன் வளருடன் மழலை -
இவ்வுலகை தான் வாழ நல்ல இடமாக
மாற்றிக் கொள்ளும் .
( நன்றி - சேக்கிழார் மாத இதழ் )

