குடும்பத்தில் கும்மி!!!!!
வடதிசை நோக்கி நடக்கும் பிணமாய்
நலிந்தவுடல் மனதுடன் நாட்கள் நகர
பொருளாதார நொண்டியை நிமிர்த்த - வெளி
நாட்டில் உழைக்கும் உழைப்பு வீனோ!!!
வெள்ளி பணப்பை கையில்லா போது
துள்ளியாடியோடி குலாவிய குடும்ப உறவுகள்
கள்ளிப்பணம் கையடக்கத்தில் அமர - கழன்று
அறுந்துப்போன கிணற்று வாளி கயிறாக குடும்பம்!!!
யார் அடித்த கும்மி இஃது
மாமி யடித்தாரா - மருமகள் உடைத்தாரா
கோழிக்கூட்டில் புகுந்து களைத்தது - பணப்பாம்போ
உள்குத்தா – வெளி குத்தா -வார்த்தை கோடாளியா!!!
கூரான வெட்டும் வார்த்தை கோடாளியால்
துண்டு துண்டாகிப்போன குடும்ப உறவுகளின்
ஒடிந்த மனங்களை ஒட்டவைக்கும் கோந்து
ஒன்றிருப்பின் உரைக்குமா உலகம் எனக்கும்!!!
அன்னைவேறு தன்மகள் வேறென்று பிரித்துப்பார்க்கு
ஆணின்மனத்தை அங்கிகரிக்க அனுமதி யிங்கில்லை
தன்யெண்ணமும் விருப்பமும் சட்டமென்ற எண்ணம்
எப்போது முண்டு எல்லா பெண்ணுக்கும்!!!
மாமிக்கு பணிசெய்ய மனமில்லா மனைவிபெண்
மருமகளிடம் கையேந்த மனமொவ்வா அன்னைபெண்
ஒரே வீட்டில் இருளொளியாய் உலாவ
உடைந்த உறவுகளாள் குழந்தையுள்ளச் சிறகு முடமாக!!!
இந்த உச்ச குடும்ப கும்மியில்
உயிர் ஒருபுறம் - உடல் மறுபுறமாக
உருண்டு நகரும் நொடிகள் நரகமாக
நாளும் நடக்கும் பிணமாய் ஆண்கள்!!!
நன்றி
வாழ்க வளமுடன்
ராசி.

