இனி ஒரு விதி செய்யப் புறப்படுவோம்

ஆயிரமாயிரம் ஆண்டின் முன்னே
ஆரம்பமான இம்மனித இனம்
ஆறறிவுடைய மனித இனம்
ஆரம்பக் காலத்தில் இதை அரியா இனம்
இயற்கையைக் கண்டு பயந்ததுண்டு
இடறினை போய்யென்று சொன்னதுண்டு
மறுமையை கண்டு மகிழ்ந்ததுண்டு
வறுமையால் வாய்ப் பொத்தி நின்றதுண்டு
நெருப்பின் உபயோகம் தெரியாமல்
நெஞ்சுருகப் பச்சையாய் உண்ட இனம்
நேற்றைய தினம்தான் மலர்ந்ததுண்டோ
நேசத்தை நம்மிடம் விதைத்ததுண்டோ
வானுக்கும் மண்ணுக்கும் பாலம் தந்து
வளமுள்ள இம்மண்ணில் மூலிகைக் கண்டு
வாழ்வுக்கு நூற்றாண்டு வைத்தியத்தை
வானலாவி தெரிந்து கொண்டு வந்தவருண்டு
இப்பூமியில் தோன்றியப் பொரும் புலவர்
தேற்றிய புதுமைகள் விதமும் உண்டு
தமிழினைத் தந்திட்ட வித்தகர்கள் இத்_
தரணியில் புகழ்பாடக் கண்டதுண்டு
ஆங்கிலம் போல் பல்வேறு மொழிகள் இதில்
தத்துவம் பேசிட வந்ததுண்டு
ஆயிரம் இருந்தென்ன நம்மிடத்தில்
அண்டமும் வானமும் நடுங்குதையா
சாதி சண்டைகள் போர் தொடுத்து
நம் சந்ததி இனமும் சாகுதையா
நீதி என்னும் தத்துவத்தை
நம் நெஞ்சம்தான் நேராய் மறைக்குதையா
சாதியைத் தூக்கி எறிந்துவிடு
குலசகதியை விட்டு எழுந்து விடு
நீயும் நானும் ஓரினமே என
ஓலமிட்டு இனி ஒன்றுபடு
காவியம் படைத்திட துணிந்துவிடு
புது கணினிமயமாக்க வென்றுவிடு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நீதிதனில்
ஒற்றுமையாம் நாம் பகிர்ந்தளிப்போம்
இனி ஒரு விதி செய்யப் புறப்படுவோம்
அப்படியே இனி வாழ்ந்திடுவோம்.

எழுதியவர் : முனைவர் செ.வீர அழகிரி (25-Mar-13, 1:17 pm)
சேர்த்தது : Dr.S.Veera alagiri
பார்வை : 104

மேலே