வஞ்சிக்கப் பட்டவள்...!!!

காக்க வைத்து...
கழுத்தில்...
சுருக்கிட வைத்தது...
ஏன் தானோ...!!!

மஞ்சள் தாலி...
எதிர்பார்த்தவள்...
மணவறை நோக்கி...
மனதால்...
நடை போட்டவள்...!!!

இன்றோ விதி...
விளையாடியதால் ...
நிர்க்கதியானாளே....
நிம்மதியற்று....!!!

யார் போட்ட கோலமோ...
யாருக்காக...
இவள் வாழ்வில்...
சாபமோ...!!!

தினம் தினம்...
வேதனை...
சுமக்கின்றதே...
இவள் இதயம்...
கனவில் மிதந்தவள்...
கண்ணீரில்....
நீந்துவது எதற்காகவோ ...!!!

பாக்கியசாலியாக...
பிறந்தவள்...
பைத்திய காரியாகி ...
நடை பிணம்...
இவள் வாழ்வில்...
ஏன் தானோ...!!!

காதல் கொண்ட...
இதயம்...
இன்று கனத்த...
இதயமாகி...
வஞ்சிக்கப் படுகின்றதே...!!!

வாய் மூடி...
மௌனிக்கின்றாளே...
வார்த்தை இல்லை...
வடிப்பதற்கு....
அவள் வாழ்வு
என் சிந்தனைத்...
துளியாகட்டும்...
என் கவிதைகளுக்காக...!!!

எழுதியவர் : கவிஞர் இராஜேந்திரகுமார் (26-Mar-13, 3:20 am)
சேர்த்தது : rajendrakumar
பார்வை : 112

மேலே