உன்னால் மட்டும் எப்படி முடிகிறது...?
கைக்குழந்தையாய்க் கதறியழ மாட்டேன் பெண்ணே...!
உன் விரல்பிடித்த என் கரத்தை...
நீ உதறிச் சென்றதால்...
நெருப்பில் நானும் விழுந்திட மாட்டேன் பெண்ணே...
மௌனமொழியால் நீ எனை...
எரியச் செய்வதால்...
நீர் பிரிந்த மீனாய் நானும்
மூர்ச்சையாக மாட்டேன் பெண்ணே...
கரையொதுக்கிய பேரலையாய் நீயெனை...
தனியாய் தத்தளிக்க விட்டதால்...
உன்னவனின் கைபிடித்து...
முன்னாள் உன்னவன்...
என் முன்னே...
உரக்கச் சிரித்து நீ கடந்திடும் போது...
முன்பெலாம் என்னை முப்பதடி தூரத்திலேயே...
அடையாளம் கண்டு கொண்டு...
புன்னகையை உதிர்த்த விழிகள் இன்று...
கண்புரை வந்து காட்சிப்பிழை கண்டதுபோல்
கண்டும் காணாமல் செல்லும் மாயமென்ன,,,
காதலை இழந்து நானிங்கு...
கண்ணீர் சிந்திட...
இரண்டாம் அத்தியாயம் ரசித்து வாழ
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது...
பெண்ணே...!
ஊமையாய் அழுகிறேன்...
ஊனுயிர் உருகி...
உன் நினைவிலேயே வாழ்கிறேன்...
காதலின் நினைவுகளை காகிதக் கிறுக்கல்களாய் அழித்துவிட்டு...
அதில் புள்ளி வைத்த கோலமாய்
குடும்ப வாழ்க்கை வரைந்து ரசித்திட...
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது பெண்ணே...?!