வெளிச்சம்
எங்கோ இருந்து பாய்ந்த - அந்த
சிறு மெழுகுதண்டின் வெளிச்சம்
கவ்விருந்த காரிருளை காய்ந்திருந்த
சருகுபோல் எரித்துப் போட்டது
துவண்டு கிடந்த என் நம்பிக்கை
சிறுவெளிச்சத்தின் சாதனை கண்டு
சட்டென்று கம்பீரமாய் எழுந்திட்டு
புது விடியலுக்கு போராட துணிந்தது
நெஞ்சம் வெளிச்சத்தை பற்றிக்கொள்ள
செல்லும் பாதையில் தெரிந்தது தெளிவு
இமைகள் சிமிட்டும் நேரத்தில் இலக்கு
நீங்கா இன்பத்தில் மனசு மகிழ்ந்தது