விவேகானந்தம்
ஆன்மீக தத்துவத்தை அவரவர்குணம் ஏற்ப
மதம்மொழி இனம்தேசம் இவை நான்ங்கும் நாடாமல்
யதார்த்த சொருபத்தை யாவரும் அடைய வேண்டி
அனைவரும் போற்றும்விதம் போதித்த நற்பெருமை
சாருமே நமதுசுவாமி விவேகா நந்தரையே !
சீறுகின்ற சிங்கமென வீறுகொண்டு எழுந்திடவே
ஆடுஎன்ற அறியாமை அகழ்ந்துதறி எறிகவென்று
எடுத்துரைத்து நீயுமே என்றும்நிலைத்த அமிர்தமே
பிராணமயமானநீ பிறர்க்கு அடிமை இல்லைஎன்று
பாவிஎன்ற பழிச்சொல்லை பாரிருந்து நீக்கவே
பக்தனுக்கு பகருகின்றார் முக்திதனை அடைவதற்கே !
நல்லனவும் தீயனவும் நமதுசித்த உட்பதிவே
உட்பதிவின் உச்சமென்ற உண்மைநிலை குணமதுவாம்
இவ்விரண்டு வரிபோதும் இனிவேண்டா கடவுளென்று
தன்குணம் மாற்றுகின்ற தந்திரத்தை தெரிந்துகொள்ளும்
கருத்தினை எடுத்துரைத்தார் கர்மத்தை ஆற்றுதற்கே !
யோகத்தில் நிலைத்திருந்து போகத்தை விடுதற்கு
அனைத்திலும் ஆண்டவனின் அருஞ்செயல் என்றெண்ணி
பக்தியை பயன்படுத்தி பகவானை அடைகவென்றார்
கலியுகத்தில் மந்திரமே கடவுள்காணும் தந்திரமே !
உடலுணர்வு வருத்தியே உண்மைகாணும் முயற்சியில்
உள்ளும்புறமும் ஆசனம் உயிர்நிறுத்திப் பிரித்தியே
உற்றுநோக்கி குவித்துமே நெடிதுநினைத்து அதாகுமே
அஷ்டஅங்க யோகமாம் அவர்கொடுத்த விளக்கமே !
சிந்தித்து நோக்கயிலே சிறுபுள்ளி விரிவுகண்டு
ஆகாயத்திற் கப்பாலே அதன்நிலை என்னவென்று
அடிமுடி காணாமல் அகத்திரைதான் போதாது
அர்த்தத்திற்கு அர்த்தமென்று அடுக்கடுக்காய் வரும்போது
மொத்தத்தில் மயங்குகின்றோம் அத்தனையும் மாயையென்ற
தத்துவத்தை தான்தந்தார் தன்ஞானம் பெறுவதற்கே !
இத்தகைய வித்தகராம் மத்தவர்க்கும் முத்தவராம்
எத்தகைய வித்தினுக்கும் உத்தவர்க்கும் சத்தவராம்
அத்தகைய புத்தருக்கு எத்தனையோ வந்தனம் !!!