.................துரோகி.................
துரோகம் செய்த தகை நான் அவளுக்கு !
வெட்கி தலைகுனியாமல் வேட்கை தனித்து,
அப்படி ஒரு பேச்சு அடங்காது அவளிடத்து !
இமைக்குற்றம் கண்ணுக்கு தெரியாதா?
என் இருண்ட குற்றம் இடிக்கிறதே இமைக்கதவை !
தண்டிக்கச் சொன்னேன் சிறுகச்சிறுக சிதைக்கிறாள் !
பொழுதுக்கு ஒரு வெறுப்பில் பழுதாகிறாள் என்னவள் !
உண்மை இதுவென்று உரக்கச்சொல்ல ஆதாரங்கள் ஏது !
எதுவுமில்லாமல் இது என்மேலேயே விழும் சாட்டையடி !
அட காதலுக்கு துரோகம்செய்தால் காதலியை விலகு !
கண்ணீரில் கரைபுரண்டு முடி உன் கதையை நீயே !
என அசராத அறைகூவல்களும் அசரீரிகளும் அடங்காமல் !
மனிதனாய்ப்போனதால் தேவதையின் தரம் தெரியாதவன் !
மன்னிப்பு எனும் வார்த்தைக்கு மௌனித்து நிற்பவன் !
துரோகிதானடி நான் நீ கடவுள் வம்சமாயிற்றே !
தண்டிக்கவும் துண்டிக்கவும் அதிகாரமிருந்தும்,
நிந்தித்து வெறுத்து ஒதுக்குதல் என்னடி நியாயம் ?
அதுவும் நித்தமும் வெவ்வேறுவித வெளிப்பாடுகளில் !
உண்மையாய் உடைகிறேன் உன்னைபார்த்தல்,
உன் விரல்கள் கோரத்தால் என்னை மறந்து,
எங்கோபோய் மிதந்து கிடப்பேன் நானென்ற நிலைமறந்து !
எனினும் எதுவும் நடக்காது இனிமை நுரைக்காது,
எனும் உண்மை உணர்ந்தாலும் உனக்கே நான் "துரோகி" !!