கடல் அலையின் ஏக்கம்

கரையோர தேவதையை
கரம்பிடிக்கும் அவாவுடன்
ஆழ்கடலிலிருந்து வருகிறேன்
ஆனால், விதியோ என்னை
மீளழைத்துச் செல்கின்றது...

உனக்காக வாங்கிவரும்
காதல் சிற்பிகளைக்கூட
கையளிக்கமுடியாமல்
கவலையுடன் திரும்புகிறேன்
கரையோரக் கன்னியே....

உன்னையே சதா எண்ணி
நான் கண்ணீர் வடிப்பதால்
பெருங்கடல்கூட காதல்
குளமாய் காட்சியளிக்கிறதடி....

விரக்தியால் பொறுமையிழந்து
நான் பொங்கியெழுந்தால்
அச்சப்படும் மக்களுக்கு,
என் அவலம் புரியாதா?

வாழ்க்கைத் துணையைத் தேடி
கடல்தாண்டிச் செல்விடாது
எனக்கு ஏன் கால்பூட்டு போட்டாய்
கடல் அன்னையே..?

இரா. சனத்
கம்பளை

எழுதியவர் : இரா. சனத் கம்பளை (29-Mar-13, 11:17 am)
சேர்த்தது : raasanath
பார்வை : 86

மேலே