காலம் தாழ்த்தாதே
காலம் தாழ்த்தாதே!
வெற்றிக் கதவுகள் தாழ்திறக்கும்.
நீ நினைத்தால்
உன் மனபலத்தால்
உன் உழைப்பை நீ விதைத்தால்
வெற்றிக் கதவுகள் தாழ் தாழ்திறக்கும்.
காலம் தாழ்த்தாதே!
சுழலும் பூமி காலம் தாழ்த்தினால்
இவ் உலகம் நின்று போகும்.
சுட்டெரிகும் சூரியன் காலம் தாழ்த்தினால்
இருள் நீண்டு போகும்.
இனியும் நீ காலம் தாழ்த்தாதே!
உன் வாழ்வை இருள் ஆக்காதே!
வெற்றிக் கதவுகள் தாழ்திறக்க
உன் மதி என்னும் பாதத்தால்
அடி எடுத்து வை!

