கத்து குட்டி கவிதைகள்

ருசி!

சித்தி தலை
கொட்டி போடும்
கறிசோறை காட்டிலும்
தாய் பாசத்தோடு
பிசைந்து கொடுக்கும்
பழஞ்சோறு ருசிக்குமே!
****************************************************************************
குடிசை

அரசனின் மாளிகையில்
அந்தப்புரத்தில் ஆயிரத்தில்
ஒருத்தியாய் இருப்பதை
காட்டிலும் புருஷனின்
குடிசையில் ஒருத்தியாய்
வாழ்வது மேன்மையே!
****************************************************************************
தோல்வி

தரம் தாழ்ந்து
வெல்வதை காட்டிலும்
குணம் கொண்டு
தோற்பது சிறந்ததே!
****************************************************************************
வாழ்வு

கோடிகோடியாய் பணம்
கோபுரமாய் வரட்டுப்புகழ்
கஞ்சாமாய் நெஞ்சம்
நோயும் நொடியுமாய்
வாழ்வு இதனைக்காட்டிலும்
கொஞ்சமாய் பணம்
அன்பான நட்பு
ஈகை நெஞ்சம்
நோய்யில்லா வாழ்வு
கொண்ட வாழ்வு
கொள்ளை அழகே!
****************************************************************************

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (30-Mar-13, 1:55 am)
பார்வை : 115

மேலே