குறுங் கவிதைகள்
சத்தமில்லாமல்
சிரித்தது நீ
எனக்குள்ளே எப்படி
வானில் பறந்தேன் ....?
நிஜம்
சோகமல்ல
நிதமும் சுகத்தில்...
நினைவாலே நீ ...!
நீ சிரித்து விட்டுப் போன
இடத்தில அவ்வளவு
முத்துக்கள் எப்படி... ?
பொம்மைகள் சிரிக்கின்றன
விளையாடாமல் ..
நீ மட்டும் எப்படி
ஆடாமல் அசையாமல் ...!
யாரிடமும் நான்
யாசகம் கேட்கவில்லை
தானாக வந்தது எப்படி ?
உன் புன்னகை என்னிடம் ...!
கண்ணுக்கு உவமை ...மை
கவிதைக்கு உவமை ..பொய்
காதலிக்கு உவமை ....நிலா
நிலவுக்கு உவமை ....ஓவியமோ...நீ ...!!