............ஓடிடுக...........
ஓடுகிறநதி ஓரிடத்திலும்,
நிற்கப்பிரியப்படுவதில்லை !
நின்றுபோனால்,
எத்தனை வளர்ச்சிகள் தடைப்படும்?
என்பதை அது அறிந்திருக்குமோ என்னவோ?
மனிதா !!
நீயும் கற்றுக்கொள் நிற்காமல் ஓடி உழைக்க !
உலகுக்கு வளம்தர !
இங்கே அநேகர் உளர் உன்னையுமறியாமல்,
உன்னால் பயனடைந்து !!
கண்ணுக்குத் தெரிவதில்லை பூக்கிற நிமிடம் !
அதுபோல் முன்னுக்கு இழுத்துவிடும் காரணி !
முழுமையை மலரச்செய்யும் அர்பணிப்பு !
உன் ஓய்வற்று ஓடும் உழைப்பு !!