காதலில் வெற்றி பெற என்ன செய்வேண்டும் ..?

காதலில் வெற்றி பெற காதலியைப் பாராட்டுங்க
********************
காதலில் முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதது. காதலர்கள் இருவரும் முதன் முதலாய் தனியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் காதலியை கவரும் வகையில் காதலன் நடந்து கொள்ளவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இல்லையெனில் முதல் சந்திப்பே இறுதி சந்திப்பாகிவிடும். எனவே காதலியை சந்திக்கச் செல்பவர்கள் கவனமா படிங்க…

பதற்றம் வேண்டாம்
******************************
முதன் முதலாக தனியாக பார்க்கப்போகிறோம் என்ற உடனே என்ன பேசுவது? எப்படி பேசுவது என்ற பதற்றம் எழத்தான் செய்யும் எனவே தனியாக ஹோம் ஒர்க் செய்யுங்கள். சொதப்பாலாக பேசக்கூடாது.

காதலி என்பவள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தனித்தன்மையான பதில்களை ரெடி செய்து கொண்டு சந்திக்கச் செல்லுங்கள்.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
*************************************************
காதலியை சந்திக்க காத்திருக்கும் தருணங்களில் பாராட்டி ஒரு குட்டிக் கவிதை எழுதி விடலாம். அவரை சந்தித்த உடன் அதை கூறலாம். காதலியின் உடை அலங்காரம், பேச்சு, சிரிப்பு என சின்ன சின்ன விசயங்களில் பாராட்டு மழை பொழியுங்கள்.

உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும் போது காதலியின் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!

காதலியை சுற்றி வரட்டும்
***************************************
இருவரும் பேசிக்கொள்ளும் போது எதைப் பற்றி ஆரம்பித்தாலும் காதலியை சுற்றியே இருக்கட்டும். ஏனெனில் அதைத்தான் எல்லா பெண்களும் விரும்புவார்கள். பேசும்போதே விருப்பங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். காதலியை நிறைய பேசவிடுங்கள். நீங்கள் அவர்கள் பேசுவதை ரசியுங்கள். அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்.

நெருக்கம் ஏற்படும்
*****************************
காதலியை உற்சாகப்படுத்தும் விசயங்களை பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும்.

உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

கண்களின் பாஷைகள்
*********************************
காதலியின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்று முற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள். அதேபோல் தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.

சுவாரஸ்யம் முக்கியம்
**********************************
முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயார்செய்து கொண்டு செல்லுங்கள்.

உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்று விட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!. கொஞ்சம் பொது அறிவும் அவசியம் எனவே அப்டேட்ஆக இருங்கள்.

உங்களை ரொம்ப பிடிக்கும்
****************************************
இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள்.

எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!!. எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். காதலியின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும்

அவளின் குடும்பத்தில் உள்ள நபர் களைப் பற்றி, அண்ணன்கள், தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.

இப்படி நாலைந்து பொதுவான விசயங்களைப் பிடித்துக் கொண்டுபேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. உங்கள் காதலும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடும்.



நன்றியுடன் : காதல் மேதை முகநூல் நண்பர்

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (2-Apr-13, 6:21 am)
பார்வை : 201

சிறந்த கட்டுரைகள்

மேலே