கலா மன்றத்துடன் ....கவின் சாரலன்

நட்சத்திரத்தை சொடுக்கி குப்பைகளையும் கோபுர உச்சிக்கு எடுத்து செல்லும் இலக்கிய குறைபாட்டுப் போக்கிற்கு மாற்றாக தரம் வாய்ந்த கவிதைகளே நட்ச்சத்திர கவிதைகள் என்று அடையாளம் காட்ட நினைக்கும் உங்கள் இலக்கிய ஆர்வத்தைப்
பாராட்டுகிறேன் . பட்டிய்லீட்டு முறையை மாற்றி கருத்துக் குறிப்புகளுடன் சொல்கிறீர்கள் .வரவேற்க்கத் தக்கது. தேர்வு செய்யும் கவிதைகளின் சீரிய வரிகளை மேற்கோள் காட்டி
தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்தால் மற்றவர்களுக்கும் ஏன் படிக்கவேண்டும் என்ற நியாயம் புரியும். கருத்துப் பதியவும்
ஆர்வம் ஏற்படலாம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்றில்லாமல் பொதுவாக நற்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து
இலக்கிய மதிப்பீடு செய்தால் நல்ல கவிதை களுக்கும் நற் கவிஞர்களுக்கும் சிறந்த இலக்கியம் போற்றுவோரிடம் ஒரு மதிப்பு ஏற்படும். கலா மன்றம் அதற்கு உறுதுணை புரிந்ததாக பெருமை அடையலாம் . சினிமா நடிகனுக்கு ரசிக மன்றம் அமைத்து போற்றுவது போல் இங்கும் பலர் செயல் படுகின்றனர். கைதட்டுவதற்கும் விசில் அடிப்பதற்கும் இது சினிமா கொட்டகையோ கிரிகெட் மைதானமோ இல்லை .
இது இணையதளத்தின் இலக்கிய தளம். அஸ்திவாரம் வலுவற்ற கட்டிடத்தில் முகப்பு அழகாய் இருந்து என்ன பயன்?
தரம்தான் இலக்கியத்தின் அடித்தளம்; அஸ்திவாரம். கவிஞனுக்கும் ரசிகன் வேண்டும்.
.
ரசிக்கும் இதயம்
கவிஞன்
தேடும் இலக்கிய மன்றம்

ஆதவனைக் கண்டு
தாமரை மலரும்
ரசிகன் கண்டால்
கவிஞன் இதயம் மலரும்
---- கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-13, 10:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே