************செய்தித்தாள்*************
எழுத்துக்களை உடையாய் அணிந்து,,
வழக்குத் தலைப்புகளைக் குடையாய்ப் பிடித்து,,
விளையாட்டு எழுத்தை நெற்றிச் சுட்டியிலிட்டு,,
வணிகச் செய்தி மாலையை, மார்பு மத்தியிலிட்டு,,
கற்பழிப்புக் கலனை தலையிலிட்டு,,
கொலைக் கொள்ளைகள் வளையலிட்டு,,
வக்கிர எழுத்தால்,,
நாளும் கற்பழிக்கப் படுபவள்..