ஆன்மாவின் அலறல்

அன்றொரு குழந்தை
அழுத விழிகளோடு
அம்மணமாய் அலறியோடி
நிழற்படமானது
வியட்நாமில்...
அமெரிக்கா அதிர்ந்தது..!
மற்றொரு குழந்தை
மலர்ந்த முகத்தோடு
பழுதான
பள்ளி வாகனத்தாலேயே
பலி ஆனது
சென்னையில்...
பெற்றோர் உலகம்
பெட்ரோல் ஆனது !
இன்றொரு குழந்தை
அமைதியாய்...
அப்பாவியாய்...
அரக்கர்களால்
மரணம் தின்று
புகைப்படமானது
இலங்கையில்...
தமிழுலகம்
எதிர்த்து எழுந்தது..!
எப்போதும்...
உறங்கும் நம்
உளச் சான்றை உசுப்ப -ஒரு
மழலையின்
மரண ஓலம் தேவைப்படுவதென்பது ..?
மனித ஆன்மாவை
கேள்விக் கணைகளால்
துளைக்கிறது...!