வாழ்க வளர்க !
எழுத்தில் நான்
வளர்கிறேனோ
இல்லையோ!
நானதிலே நலமாக
வாழ்கிறேன்..
இலக்கியம்
என்னையேற்குமோ
இல்லையோ!
நானதன் காலடியில்
கிடக்கிறேன்..
வாசகர்கள்
என்னை வாசிக்கின்றனரோ
இல்லையோ!
நானவர்களை
நேசிக்கிறேன்.
கவிஞர்கள்
என்னை வரவேற்கினரோ
இல்லையோ!
நானவர்களை
வணங்குகிறேன்.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.