10. குறும் (பா) - அஹமது அலி

தாவரம்
~~~~~~~~
விதையின் கூட்டை
விளையாட்டாய் உடைத்து
தா(வும்) வரம்.!


மரங்கள்
~~~~~~~~~
அடியெடுத்து வைக்க தெரியாத
மண்ணின் மடிக் குழந்தைகள்.!

மழை
~~~~~~
நீரிழை கொண்டு
மண்மேனி தைத்திடும்
சுக ஊசிகள்!

மலைகள்
~~~~~~~~~
பூமி போடும் ஆட்டத்திற்கெல்லாம்
ஓங்கி அறையப் பட்ட
ஆப்புகள்!

அருவி
~~~~~~
அள்ளி முடியா கூந்தலில்
வெள்ளித் தைலம் பூசிய
கொள்ளை அழகு!

நிலம்
~~~~~
இறைவனின் பட்டா உரிமைக்கு
மனிதன் போட்டா போட்டி
போடும் இடம்!

சாலைகள்
~~~~~~~~~~
எந்திரப் பூச்சிகளின்
தந்திரமான ஓடு பாதை!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (4-Apr-13, 8:03 am)
பார்வை : 107

மேலே