காதலே நீ நீ நீ!!!!

வாடும் இளமை பயிருக்கு
வான் மழையாக …

வாலிபம் தொடும் அனைவரையும்
வரவேற்க்கும் வண்ண மலர் வாசலாக…

முளை விடும் வாலிபத்துக்கு
கற்பனை வளம் ஊட்டும் தாயாக…

பெற்றவளின் மடியை தாக்கும்
பேரிடி ஒலியாக…

இளைஞர்,இளைஞிகள் மனதில்
ஆயுதம் இன்றி நுழையும் ஆழிப்பேரலையாக ..

கடுகளவும் வீரமில்லா இளைஞனை
மலையை தகர்க்கும் வீரனாக்க…

அசையும் விழி
அசையாமல் யுமிழ்ந்த ஒளியாக…


வறண்ட கற்பனை ஆற்றில்
தோண்ட ஊறும் ஊற்று நீராக…

வாழும் இளம் வாலிப உள்ளங்களுக்கு
உலக பொது மொழியாக…

அது வரை அறியா அங்க உறுப்புக்களை
அறிய வைத்த விஞ்ஞானியாக…

காதலே நீ நீ நீ!!!!

தமிழ் யிலக்கணம் அறியா என்னையும்
கமழும் தமிழ் கவிதை வடிக்கவைத்தாயே...

நன்றி

வாழ்க வளமுடன்

சிவா

எழுதியவர் : சிவா (4-Apr-13, 9:20 am)
சேர்த்தது : siva71
பார்வை : 57

மேலே