திணை மாற்றம்

சோர்ந்துபோய்
தரையில் விழுந்தேன்.
நத்தைகள்
தண்ணீர் கொடுத்தது...
வண்டுகள்
தேன் கொடுத்தது...
காற்று
புழுக்கத்தைப் போக்க
காக்கை வாயில் எச்சமிட்டது.
இதுகூட பரவாயில்லை!
கண் விழித்துப் பார்த்தேன்:
என்னைச் சுற்றி மனிதர்கள்-
செய்தி சேகரிப்பாளர்கள்
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்-
காவல் துறையினர்
என்னைக் கோடுபோட்டு
ஓவியமாய் வரைந்திருந்தார்கள்-
வயிற்றுப் பசியைப் போக்க
இவைகள் எதுவும்
சிந்திக்கவில்லை.

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (4-Apr-13, 5:13 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 164

மேலே