பிறர் மனதை நோகடிக்காதே கண்ணா!

தங்கமே,வைரமே
திறமையே,ருசிக்கும்
இனிப்பே,பலபல
என மின்னும்
பொக்கிஷமே,தேவ
தூதனெ கிழே
குறிப்பிட்டது போல்
இருக்காதே செல்லமே!

மற்றவர்களை நோக்கி
ஒரு விரல்
நீட்டி குற்றம்
சொல்லும் பொழுது
கட்டை விரல்
கடவுளை சாட்சியாய்
வைத்து மீதமுள்ள
மூன்று விரல்களும்
உனை நோக்கி
உன் குற்றங்களை
ஒப்பாரி வைப்பதை
மறந்து விடாதே!

தங்கத்தினால் ஆன
செருப்பு என்பதால்
தலையில் அணியவா
முடியும்?

வைர ஊசி
என்பதால் வாய்க்குள்
போட்டு முழுங்கி
வயிற்ருக்குள் வைத்தா
பாதுகாக்க முடியும்?

திறமையான தீவிரவாதி
என்பதால் நாட்டின்
ராணுவத்தில் தலைமை
அதிகாரியாய் நியமிக்கவா
முடியும்?

ருசியாய் இருக்கும்
என்பதற்காக இனிக்கும்
விஷத்தை ஆனந்தமாய்
பருகவா முடியும்?

மின்னுவது எல்லாம்
பொன்னல்ல என்பதை
ஆரம்ப பாடசாலையிலேயே
கற்றவர்கள் தமிழர்கள்!

மேலே செல்ல
செல்ல வெப்பம்
குறையுமாம் இது
அறிவியல்!

புகழ் மேலோங்க
மேலோங்க தலைக்கணம்
அதிகரித்தால் அது
உனக்கு அழிவியல்!

தெய்வத்தை பூஜிக்கும்
பூசாரி வேடத்தில்
நீ இருக்க!

நாதி இல்லாமல்
செய்த பாவங்களை
எண்ணி கடவுளிடம்
மனதார மன்னிப்பு
கேட்க கோவிலுக்கு
வந்த தாசியிடம்!

ஒரு நாளைக்கு
எத்தனை பேர்
என்ற கணக்கை
காம பார்வையில்
கேட்டு நரக
கதவுகளை தெனாவட்டாக
அல்லவா தட்டி
கொண்டு இருக்கிறாய்?!

தாசி மாகாராசி
வாங்கிய பணத்திற்கு
உண்மையாய் உழைத்தாள்
நிச்சயமாய் அவள்
சொர்க்கம் போவாள்!

ஆனால் பூசாரி
வேஷத்தில் இருக்கும்
நீ???????????????????

தங்கமே,வைரமே
திறமையே,ருசிக்கும்
இனிப்பே,பலபல
என மின்னும்
பொக்கிஷமே,தேவ
தூதனெ சொன்ன
கேட்டுக்கோடா குட்டி
மேலே குறிப்பிட்டது
போல் இருக்காதே
நல்ல பய
சொன்ன கேட்டுப்பான்!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (4-Apr-13, 9:05 pm)
பார்வை : 335

மேலே