அக்னிக்குஞ்சுகள்-1 (ஆயிரம் கிழக்குகள் அவதரிக்கும்)

தீபகற்பத்தின் உச்சியில்
புகைநிலம்புடைக்கிறது!
புதிய பூமி எழுகிறது
நியாயத்தீர்ப்பு
புழுங்குகிறது!

கனவு தேசத்தின்
கல்லறையிலே
காகித ஒப்பந்தம்
கண்ணீர் அஞ்சலியால்
கையெழுத்தாகிறது!

முலைகட்டிய மார்பில்
தீயாய்சுரந்து
விழுகிறது
சுண்டிப்போன
கள்ளிப்பாலும்..!

விடிகரைஎழுவதற்க்குள்
எரிகரையில்ஏழுசுரமும்
கருமவாத்தியம்
முடிக்கிறது!

சுடும் உடலின்
சூரிய திரவத்தை
கவ்விக்கொள்ளவே
பீடபூமியின்
பிணமலைகள்
புரண்டு கிடக்கிறது!

என் வடுகுருதி
விடுதலை யிழந்தது...
நெஞ்சத்தில் எரிகிறது
ஈரமழைகள்,
ஏதோ நிறத்தில்
பொழிகிறது....

என் நாடிக்கருவி
நாதி யிழந்து
தாடிமயிரிலும்
காவு நடக்கிறது! ....

சவம் கற்று
தகனப் புற்றிலே
தவம் பெற்றது
என் வீரிய மீசைகள்!

அமில சுனைகளில்
நடந்து போய்
அச்சம் கலைந்தது
என் ஆறாத்தழும்புகள்!

கிழக்கிலே பாயும்
அம்புகளாலே
அந்தியின் இரத்தம்
அடுத்த கதிரவனை
மேற்கிலேஅவதரிக்கும்!


நெஞ்சிலே பாய்ச்சிய
அம்புகளாலே
ஆயிரம் பிஞ்சுகள்
அடுத்த கிழக்கில்
அக்னிக்குஞ்சுகளாய்
அவதரிக்கும்!

எழுதியவர் : ருத்ரா (4-Apr-13, 8:46 pm)
பார்வை : 133

மேலே