தமிழ்நாடு ஆக வேண்டாம் தனிநாடு

ஜனநாயகம் -இந்நாட்டில்
...............தப்பிப் பிழைக்குமா?
இற்றுப் போன -சம நீதி
................செத்துப் பிழைக்குமா?

ஒருமைப்பாடு-பெருமை
..................வறுமைப் படுமா?
ஓரவஞ்சனை -பரிவு
.................பிரிவை தருமா?

நீதியின் குரல்கள்- நிராகரிப்பில்
..................நின்று போகுமா?
வாதியாகவே வாழ்ந்து-எங்கள்
..................வாழ்க்கை முடிந்து போகுமா?

தாகத்தில் தவித்து-விளைநிலங்கள்
....................பாலைவனமாகுமா?
இருள் காட்டில் -இப்போதும் வாழ
.....................இது என்ன கற்காலமா?

இரு உயிருக்காய்-வெகுண்டெழுந்து
.......................இத்தாலியை மிரட்டுகிறாய்
ஐநூறு உயிரை பலி கொடுத்தும்-எதற்கு
.......................இலங்கையை நட்பு பாராட்டுகிறாய்?

கேரளத்து மீனவர்-உயிர் மட்டும்
.........................உயிரா உனக்கு?
தமிழகத்து மீனவர் -உயிர் அற்ப
.........................மயிரா உனக்கு?

நாங்கள் இந்தியன் -என்றால்
.............எங்கள் எதிரி உனக்கும் எதிரி
எங்கள் எதிரி உனக்கு -நண்பனால்
.............நாங்கள் யார் உனக்கு?

சிவப்பு கம்பளத்தால்-வரவேற்கிறாய்
..................எங்களுயிரை எடுப்பவனுக்கு
சின(வ)ந்து விட்டோம்- பார்
.................எங்கள் உரிமையை எடுப்பதற்கு.!

இந்தியனாய் நாங்கள் வாழ-எம்மை
....................சரிசமமாய் மதித்திடு!
இந்நிலை தொடர்ந்து -ஆக வேண்டாம்
....................தமிழ்நாடு தனிநாடு.!


இந்தியனாய் இருப்பதற்கே-என்றும்
...................ஆசை கொள்கிறோம்
இந்தியனாய் நீ மதிக்கும்-வரை
..................என் தாய்த் திருநாடே.!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (5-Apr-13, 8:07 am)
பார்வை : 190

மேலே