ரசித்தால் கவிதை

சிரித்தால்
-------மழலை
சிவந்தால்
-------உதயம்
கவிந்தால்
------- மாலை
மலர்ந்தால்
-------தாமரை
மௌனத்தில் விரிந்தால்
-------மலர் புன்னகை
கன்னத்தில் குழிந்தால்
-------கள்ளூறும் கற்பனை
நிலவு நடந்தால்
-------வானம்
நினைவு நடந்தால்
-------நெஞ்சம்
படர்ந்தால்
--------முல்லைக்கொடி
ஒரு நொடி பார்த்தால்
--------உந்தன் நேசக் கொடி
நடந்தால்
-------காவிரி
நின்றால்
------அரசியல்
விடிந்தால்
------வாழ்க்கை
முடிந்தால்
------பயணம்
எழுதினால்
------எல்லாம் புத்தகம்
ரசித்தால்
------அதுதான் கவிதை
----கவின் சாரலன்