இரவுகளை கடந்து....
இரவுகளை கடந்து வந்து
கனவுகள் நனவாகுமா ?
பொய்களை கடந்து வந்து
கற்பனைகள் நிஜங்களாகுமா ?
கனவுகள் கற்பனைக்கு அப்பால்
வாழ்க்கை யதார்த்தத்தில் நிலை பெறுமா ?
சத்தியத்தின் நெடிய வழி காலில் சுடுகிறது
நெஞ்சம் கற்பனை வானில் மிதக்கிறது.
எதிர்பார்ப்பினில் ஏங்கி நிற்கிறான் மனிதன்.
----கவின் சாரலன்