கண்ணில் தெரியும் கபாடபுரம்:-

கண்ணில் தெரியும் கபாடபுரம்:-

குறிப்பு: 2011ம் ஆண்டு ஜப்பானில் ஆலிப்பேரலை அழித்த அழிவை தொலைக்காட்சியில் பார்த்தபோது எழுதியது.

ஆலிப்பேரலையின் அடங்கா சீற்றந் தன்னை
தொலைக்காட்சி தன்னில் கண்டோரெல்லாம் கண்
கலங்கி மனம்குழைந்து மொளனமாக மழை பொழிய
சொல்லாச்சொல்லை பார்க்கா காட்சியை யிங்கே விரிக்கிறேன்!

மூ வாயிர ஆண்டுமுன் ஆயுதமின்றி நுழைந்த ஆலிப்பேரலை
கற்பகச்சோலையான எங்கள் கபாடபுரம் தன்னை
கரிக்கொட்டையின் சுவடு கூட கண்ணில் தெரியாமல்
தன்னில் மூழ்கியழித்ததை யிங்கு யாரரிவாரோ…

புன்னைமரத்தடி காற்றில்வு றங்கியோனும் புதுப்
பூதன்னை மணந்து கண்ணயர்ந்த கட்டிலங்வாலிபனையும்
பூதவுலகில் புதிதாய்பி றந்த மொட்டும், மலரும்
புலரும் விடியல் நோக்கியிருந்தோரையும் அழித்தாயே..

ஆவும், மாவும் வளர தண்ணீரூற்றிய யென்மூத்தாளை
நோயாக, பேயாக பெருந்தீயாக வந்தழித்தாயே
வாழ்ந்த சுவடுதெரியாமலே வாரியணைத்து அழித்தாயே
தாயே, தாயே, தாயேயென்று அழைத்தால் அழைத்தாயோ…


செந்தீ யழிப்பின் துணைக்கு நின்னை அழைப்பேன்
நீயே அழிக்கவந்தால் துணைக்கு இங்கு யாரையழைப்பேன்?
ஒருவழி மூடின் மறுவழி திறப்பதிந்த வுலகநியதி
திரும்பிய இடமெல்லாம் நீயேயானதால் வாழ்விழந்தோம்

விஞ்ஞானம் விரியா யிந்தவுலகம் தன்னில்
அஞ்ஞானம் அழித்த யென்தமிழ் சமுதாயந்தன்னை
சாட்சிக்கு சாயம்கூட வைக்காமல் சகலத்தையும் அழித்தாயே
சாக்காடு கொடுத்தும் கடல்தாயே நின்னை வணங்குவதேன்?

விஞ்ஞானம் வந்தின்று யெங்கள் மதிதன்னை திறந்திடினும்
நின்னை போன்ற விதிதன்னை அடைப்பது அரிது, கடிது
விதியென கடவது நாளைவரும் வினையன்றி
வேறெது யென்று யானிங்கு முன் விரிப்பேன்!

உருதெரியா யெங்கள் கருகலைத்த ஆலிப்பேரலையே
என்வினை நீயானால் நின்வினை யாரோ
மறுமுறை எங்களை நோக்கி வா; வந்தின்
உன்னில்விழுங்கிய என்தன் மூதோரை உயிருடன் உமிழ்ந்து போ!



நன்றி

வாழ்க வளமுடன்

சிவக்குமார்

எழுதியவர் : சிவக்குமார் (5-Apr-13, 12:04 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 202

சிறந்த கவிதைகள்

மேலே