உயிர் பெறுமா ஓவியம் ?
உள்ளத்தில் உவகை பெருக்கு
உன்னத ஓவியம் கண்டதால்
எல்லை இல்லாத கற்பனை
ஆவலை தூண்டும் சிந்தனை
உலகின் பிரபலங்கள் ஒன்றாய்
உள்ளத்தில் பதிந்தது நன்றாய்
எண்ணினேன் ஒருநொடி நான்
ஏங்கினேன் உயிராய் கண்டிட
துணிந்த மனத்தை நினைத்தேன்
பணிந்த தூரிகையை வாழ்த்தினேன்
வைர உள்ளம்தான் ஓவியவரே
வாழியவே வையகம் உள்ளவரை !
பழனி குமார்