எம் கவிதைகள்

தேனின் சுவை
அறியாமல் தேடித்தேடி
களைக்கிறது
பட்டாம் பூச்சிகள்...!

வலையை அழகாக்க
நெளிந்து வளைந்து களைத்து
பின் எழுந்து கலைத்து வடித்து
வடிவமைக்கிறது
சிலந்திப் பூச்சிகள் ...!

மண்ணின் வாசனை தேடி
உழன்று உழுந்து நுழைந்து
விழுங்கி வாழ்கிறது
மண்புழுக்கள்...!

பூக்கள் வாசம் போகும் வரை
உதிர்ந்து எழுந்து காய்ந்து
மறுபடியும் முயன்று
உயிர்ப்பித்து
பூத்துக்கொண்டே
பனித்துளிகளை உதிர்த்து
பிரகாசிக்கிறது பூச்செடிகள்...!

தொடர்ந்து உயிர்ப்பித்துக் கொண்டு
கற்பனையில் உவமையில்
சாந்தசொரூபமாய்
எதுகை மோனையில் லயித்து
எழுதுப்பூக்களைச் சூடி
எழுதி ரசித்து பிரசவிக்கிறது
எம் கவிதைகள் மாசற்ற
புனித வரையோலையாய்...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (5-Apr-13, 7:36 am)
Tanglish : yem kavidaigal
பார்வை : 117

மேலே