குடி குடியை கெடுக்கும்!
கடை வீதியில்
நடந்து கொண்டு
இருந்த என்னை
பொம்மை கடைகாரரிடம்
பேரம் பேசி
கொண்டிருந்த பொடியனின்
குரல் ஈர்த்தது!
பொம்மைகளை வாங்குவது
போல் பேசும்
பொம்மையை நெருக்கத்தில்
இருந்து பார்க்க
முடிவு செய்தேன்!
எவ்வளவு பிரியம்
அக்குழந்தைக்கு அப்பொம்மையில்!
கடைகாரரோ இல்லை
தம்பி தாங்கள்
வைத்துள்ள பணம்
அப்போம்மைக்கு போதாது
என்கிறார் மீண்டும்
பணத்தை எண்ணிய
பொடியன் அங்கிருந்த
மேசைமீது அப்பணத்தை
வைத்து விட்டு
குனிந்த படி
அவனின் கால்சட்டையில்
எதையோ தேடுகிறான்!
இதுதான் சமயம்
என்று கையில்
கிடைத்த என்
பணத்தை எடுத்து
அவன் பணத்தோடு
வைத்து விட்டேன்!
கால் சட்டையில்
இருந்து வெறும்
கையை எடுத்தவன்
மீண்டும் பணத்தை
அவனின் அழகிய
பிஞ்சு விரல்களால்
எண்ணி வியக்கிறான்!
கடைகாரரிடம் இந்தாங்க
நீங்க கேட்ட
பணம் அந்த
பொம்மையை இப்போ
கொடுப்பிங்களா என
பணத்தை நீட்டினான்!
கடைகாராரோ கால்
சட்டையில் வைத்திருந்தாயா
என்கிறார் இல்லை
கடவுள் கொடுத்தார்
என்றான் நானோ
அவனின் மழலை
உண்மையை எண்ணி
அவனையே வைத்த
கண் வாங்கியபடி
பார்த்துக்கொண்டு இருந்தேன்!
அவன் தொடர்ந்தான்
என் தங்கையை
கடவுள் அழைத்து
சென்று விட்டார்
அவளுக்கு இந்த
பொம்மை என்றால்
ரொம்ப பிடிக்கும்
இன்னும் இரண்டொரு
நாட்களில் என்
அம்மாவும் அவளை
பார்க்க செல்கிறார்கள்
அவர்களிடம் இந்த
பொம்மையை என்
தங்கைக்கு கொடுக்க
சொல்லி கொடுக்கவே
வாங்குகிறேன் என்றான்!
எதுவும் புரியவில்லை
எனக்கும் அக்கடைக்காரருக்கும்!
கடைகாரர் பொம்மையை
எடுத்து சிரித்தபடி
அவன் கையில்
கொடுத்து மீதியாக
கொஞ்சம் சில்லறையையும்
கொடுக்கிறார் அவனிடம்!
விழிகளால் சிரித்த
பொடியன் மீண்டும்
பேசுகிறான் என்
அம்மாவுக்கு வெள்ளைரோஜா
ரொம்ப பிடிக்கும்
ஆனால் கடவுளிடம்
இதற்க்கு பணம்
கேட்க தயக்கமாக
இருந்தது தங்கைக்கு
பொம்மை அம்மாவுக்கு
ரோஜா என
இரண்டையும் கேட்க
ஆனால் கடவுள்
என் மனதில்
இருந்ததை தெரிந்து
கொண்டு இரண்டுக்குமே
பணம் கொடுத்து
விட்டார் என்று
சொல்லி முடித்து
தன் வாயால்
வாகன சத்தம்
இட்டபடி அழகிய
ஓட்டமாய் ஓடி
போனான்!
கண்ணில் இருந்து
அவன் மறையும்
வரை அவனை
ரசித்த நான்
அவன் சென்ற
பிறகு அவனின்
அழகிய பேச்சை
அசைபோட்டபடி
அலுவலகத்துக்கு சென்று
விட்டேன்!
மறுநாள் அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்ந்திருந்த நண்பனை
பார்க்க சென்றேன்!
அங்கே யாரோ
பெண்மணி இறந்து
விட ஒரே
அழுகையும் ஆர்பாட்டமுமாய்
இருந்தது தற்செயலாய்
அதை பார்க்க
நேர்ந்த எனக்கு
பயங்கர அதிர்ச்சியாகவும்
என்னை அறியாமல்
அழவும் தொடக்கி
விட்டேன்!
நேற்று பொம்மை
வாங்கிய பொம்மை
அந்த இறந்த
பெண்ணின் மார்பில்
தான் வாங்கிய
பொம்மையை வைத்துவிட்டு
கையில் வெள்ளைரோஜாவை
திணித்து கொண்டு
இருந்தான்!
இரு தினங்களுக்கு
முன்பு கையில்
குழந்தையுடன் சாலையை
கடக்க முற்ப்பட்ட
பெண்மணியை குடித்து
விட்டு நிதானம்
இல்லாமல் வாகனம்
ஓட்டி ஒருவன்
இடித்து விட்டதாக
அங்கிருந்தவர்கள் பேசிகொண்டார்கள்!
அற்பகுடி அவ்வழகிய
குடியை கெடுத்து
விட்டது!
சிந்தனை செய்யுங்கள் தோழர்களே !!!