என் தோழனே
தோழா..!!
தோழமை என்றால் நீயென்றிருந்தேன்
யோசிப்பது தான் உன் குணம்மென்றாய்....!!!
புரிய வைத்தாயதை உன்செயலால்
அடர்ந்த காடுகளுக்கு மத்தியில்
தென்றலாய் தவழ்ந்துஓடும் வெண்மை நதியாய்
உன்மேல் நட்பு கொண்டுஇருந்தேன் ....!!
அன்பும் பாசமும் தானுன்னிடம் யாசித்தேன்
அதையன்றி வேறொன்றையறியேன்..!!!
ஆனால் நீயோ என் மேல் கொண்ட வெறுப்பால்
களைத்துவிட்டேன் தேடி தேடி
உன் நட்பை..!!
ஓடி ஒதுங்க இடம் உண்டு உன்னிடம்
என்று தேடிவந்தேன்
ஆனால் நீயோ விரட்டி
அடித்தாய் என்
கனவுகளுக்காய் மட்டும் அல்ல
நிஜத்திலும் நானோ உன் நட்புக்காக
கரைகின்றேன் இன்னும்..!!
பகை சொல்லி முறைக்காது
புன்னகைத்து உன் கால்வாரி
முதுகில் குற்றும் முகங்களே
உன்னைச் சுற்றி நிற்கின்ற
உண்மைகளை
என்றைக்கேனும் நீ புரிந்து கொள்வாய்.
அன்றைக்கு..!!!
எங்கோ நானிருப்பேன்
என்று நினைத்துவிடாதே
அன்றும்..!!
உன் அருகினில் உன் வரவுக்காக
காத்து இருப்பேன் உனகாக தோழா..!!!