அந்த கடைசி இரவு -தனஞ்சன்

காதலனுக்கு திருமணம் காதலியை பிரியும் நிலையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். அவர்களின் சில உணர்வுகளின் சிருபகுதிக்கவிதை



நொந்துபோன நினைவுகளோ
நத்தைபோல நகரயிலெ
நித்தமில்லா கலகலப்பு
வீட்டுக்குள் வெடிக்கிறது

என் மனதில் மட்டும்
இடி முழக்கம்

ஈரம் உள்ள துணிகூட
நேரம் வந்தால் காய்ந்துவிடும் என்
நெஞ்சில் ஊரும் ஈரத்தை
யார்வந்து காயவைக்க

நாளை வரும் விடியலிலே
நம் காதல் அஸ்தமிக்கும்
முடிவென்ற சந்திக்கும்
மறுநொடியே விடை கிட்டும்

கடைசியாய் ஒன்று கேட்கவா ?

நான் உன்னை
ஒருமுறையேனும் முத்த.....

ஸ்தம்பித்துப்போனது
குரல்வளை மட்டுமல்ல
அந்த கடைசி இரவும்தான்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (6-Apr-13, 10:49 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 183

மேலே