சக்தியின் பக்தன் சிவனிடம் கேட்டு...

//ஒரு இணையத்தளதில் கவிதைப்போட்டியாம் ,கண்டேன்
போட்டிக்கு பாட்டெழுத என்னால் முடியுமா அதனால்........//


பாட்டெழுதப் பார்வதிக்குப்
..பாதியுடல் ஈந்தவனைப்
...பார்க்கவெனக் கோவிலடி போனேன்
ஏட்டினிலே போட்டியினை
..எண்ணியொரு தீங்கவிதை
..ஏற்றமுறத் தாவெனவே கேட்டேன்
நாட்டினிலே நாளிலன்று
..நாவினிக்க வோர் புலவன்
..நீட்டியகை மீதுகவி யீந்தாய்
கேட்டவுடன் பாட்டெழுதிக்
...குற்றமெனக் கண்டவரை
...போட்டுவிட்டதாகவும்தான் சொன்னார்

கேட்டுமொரு பாட்டினையே
...கூப்பிக் கரம் கொண்டிருக்க
...கோவிலிடை சாமிகுரல் கேட்டேன்
”பாட்டெழுத வந்தவனுன்
...பாட்டினிலே பட்டழியும்
...பாடுதனை எண்ணினையோ பாவி
பாட்டெழுதச் சொன்னவளும்
...பக்கமுண்டு பார்த்திருக்கப்
....பாட்டெழுதக் கேட்டனை யுன்பாடு
பாட்டினிலே நானெழுதி
....பாடவென ஆகிவிடும்
....பார்த்திருக்க ஓடியொழி என்றான்

ஓடு என்ற போதுமன
...தோடுகொண்ட ஆசைகளை
....ஓடவிட்டே ஒடுமெண்ணம் இன்றி
ஓடு தலை மாலைகொண்டும்
...ஓடிநடம் பேய்கணங்க
....ளோடு செய்யும் கூத்தன்நினை நம்பி
ஓடு ஏந்தும் யாசகனாய் .
....உன்னை யெண்ணிவந்தவனை
....ஒடுவென்பதென், கவிதையின்றி
ஓடுசுழல் பூமியிலே
....ஓடியுயிர் போய்விடினும்
....ஓடுபவனல்லன் இவன் என்றேன்

நாடிவந்தபோது உந்தன்
....நாடுஎண்ணி வந்தனையோ
....நாடுவதை ஈவதென்று எண்ண
நாடிதனில் ஓடும் கவி
....நாவிலெழக் கூறலின்றி
....நாதனிடம் கேட்டதென்ன என்றாள்
நாடி நரம்பே யுறைய .
...நான்வணங்கும் சக்திவர
...நாதன்வேறு சக்திவேறென் றுண்டோ
நாடிய தொன் றென்றவனை
...நல்லினிய புன்னகையாள்
...நான்வணங்கப் பூங்கவிதை ஈந்தாள்

***********

எழுதியவர் : கிரிகாசன் (6-Apr-13, 7:05 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 121

சிறந்த கவிதைகள்

மேலே