கைடா கால்டா

என்னங்க கைடா கால்டானு கத்திட்டு

இருக்கறீங்க?


@@@@@@

எனக்கு இரட்டைப் பிள்ளைகள்.

அவுங்களைக் கூப்பிட்டேன்.

@@@@@

அதுக்கு எதுக்குங்க கைடா, கால்டானு

சத்தமாய்ச் சொன்னீங்க?

@@@@@@@

என்னோட இரட்டைக் குழந்தைகள்

பேருங்களச் சொல்லித்தான்

கூப்பிட்டேனுங்க

@@@@@@@@@

உங்க இரட்டைக் குழந்தைகள்

பேருங்களா?


எதுக்கு இது மாதிரி பேருங்களை வச்சீங்க?

@@@@@@@

நீங்க உங்க பிள்ளைகளுக்கு இந்திப்

பேருங்களைத் தானே வச்சிருக்கிறீங்க?

@@@@@@

அதில் என்னங்க சந்தேகம்? இந்திப்

பேருங்களை பெத்த பிள்ளைகளுக்கு


வைக்கிறவங்க தானே


உண்மையான தமிழர்கள்.

@@@@@@

அது சரிங்க நீங்க வீட்டிலேயும்

வெளியிலயும் 'இந்தி'லயா பேசறீங்க?

@@@@@@@

இல்லை. தமிழ் தான் என் தாய் மொழி.

@@@@@@

எனக்கும் தாய்மொழி தமிழ் தான். எனக்கு

ஜப்பானிய மொழி தெரியாது. ஆனால்

என் இரட்டைப் பிள்ளைகள்ல பெண்

குழந்தைக்கு 'கைடா"ங்கிற ஜப்பானியப்

பேரை வச்சோம். பையனுக்கு அதே மாதிரி

பேரை வச்சத்தான் நல்லா இருக்கும்.

அதனால் அவனுக்கு 'கால்டா'னு பேரு

வச்சோம். இது நாங்கள் உருவாக்கின

பேருங்க.

@@@@@@@@@

அருமை. ஸ்வீட் நேம்ஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Kaida = Little Dragon. Feminine Japanese

name

எழுதியவர் : மலர் (5-Jul-24, 6:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 6

மேலே