இப்படிக்கு ஏழ்மை !

வீடில்லா குடும்பவாசிகள் ,
இவர்களும் சுதந்திரவாசிகள் ,
நாடே வளர்ச்சியில் பயணிப்பதாய் வரலாறு கூறுது,
இருந்தும் இவர்களின் நிலை என்று மாறுது !

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
துன்பங்கள் மாறி இன்பங்கள் சேரும்
நம்பிக்கை எண்ணங்கள் நம்மில் இருக்கையில் !

காசும் பணமும் பெரிதென கொண்டு
ஏசும் நிலையில் பணக்கார கூட்டம்
மாடி வீடும் கோடி பணமும் குளிர்காற்றும்
ஏகபோக வாழ்க்கையோடு !

குறைக்கும் நாய் வீட்டிற்குள்ளும்
பேசும் மனிதன் தெருவிலும் காவல் காக்கிறான் ,
மழைக்கு கூட இரக்கமில்லை
மாடி வீட்டை விட்டுவிட்டு ஏழையின் கூரையை சூழ்ந்துகொல்லுது !

ஏழையின் பாடு தெருவில் நிற்குது ,
கந்தையை கேட்டு கையை நீட்டுது,
குப்பையில் போடும் மனம் கொண்டவன்
கையில் கொடுக்க ஏனோ மறுக்கிறான் !

மதசண்டை சாதிச்சண்டை
சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கையில்
குப்பை தொட்டியில் சண்டை போட்டு
எச்சங்களை தின்னுது எழைக்கூட்டம் !

சுய விளம்பரத்திருக்கு கோடி கோடியாய்
விளம்பரம் செய்யும் கேடிகளுக்கு இடையில்
கோமனத்திர்க்கும் வழியில்லாமல்
கிழிந்து கிடக்கு ஏழையின் மானம் !

ஆட்சிகள் மாறுது காட்சிகள் மாறுது
அதிகாரப்பரம்பரை ஆட்டம் காட்டுது
நீதிகூட ஏழையின் பக்கம் எட்டா கனியா மறுப்பு காட்டுது !

வறுமை கோட்டின் நிலை தன்னை
ஏழையின் வயிற்று கோடுகள் எடுத்து காட்டுது
மூன்று வேலை சோறுகூட
ஒருவேளையாக குறைந்து போகுது !

எத்தனை காலம் போன போதும்
ஏழை நிலை மாறவில்லை
ஏழ்மை நிலையம் மாறவில்லை
கிடைத்ததை எல்லாம் தனக்கென நினைக்கும்
மனிதன் ஒழியும் நாளே , ஏழ்மையும் ஒழியும் நாள் !

எழுதியவர் : வினாயக்முருகன் (6-Apr-13, 9:16 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 1911

மேலே