(10) தந்திர காட்டில் நான் (2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்
(2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்
***************(தொடர்ச்சி )*********************
அதிர்ச்சியுற்ற நானோ
அழிவை பற்றி வினவ
அமைதியான மரமோ
அன்பே என்று மீண்டும்
அதன் பாணியில் !
உனது ஆயுள் படிப்படியாய்
இறங்கிய காரணம் அறியாயோ
அன்பே -அதன் காரணம் அறியாயோ !
உனது அங்கம் புதுபுதுதாய்
நோய் அணைத்த காரணம் அறியாயோ
அன்பே அதன் காரணம் அறியாயோ !
காற்றணைக்கும் உன் நுரையீரல்
தன கனஅளவை சுருக்கிய
காரணம் நோற்பாயோ அன்பே
அதன் காரணம் நோற்பாயோ !
ஆற்றின் நீரில் தாதுக்கள் குறைந்த
காரணம் அறியாயோ அன்பே
அதன் காரணம் அறியாயோ !
சத்துக்கள் மெல்ல
குறைகின்ற நிலத்தின்
நிலைமை நினைத்து பாராயோ
அன்பே அதன் காரணம் பகர்வாயோ !
**************(தொடரும் )***********************
அன்புடன்
கார்த்தி