துளிகள்-II -கே.எஸ்.கலை
![](https://eluthu.com/images/loading.gif)
பழைய குளம்
தவளைக்கு காயம்
வறட்சி !
•
ஏழை குடிசையில்
இரவு விளக்குகளாய்
மின்மினிகள் !
•
மூடநம்பிக்கைகள்
சபித்துக் கொண்டிருக்கின்றன
பூனைகளை !
•
டாவின்சிக்கு தோல்வி
எதிர்ச் சுவரில் மழலைக்
கிறுக்கல் !
•
தமிழகத் தோழர்களுக்கு
மின்மினிப் பூச்சிகள் அழகாம்-
மின்வெட்டு !