என் தமிழினமே

விதை யொடு விழித்து
கன வொடு களித்து
சிறு ஓட, இளையாட
முது ரசிக்கக் கண்டேனடி
"ஆக்கல்" இன்றி ஆனதுடன்
மக்கள் செழிக்கக் கண்டேனடி

தமிழாள ஞாலமுயரக் கண்டேனடி

ஆ(அ)ரியம் அமில மூற்றத்
திராவிடமெனத் தமிழ்த் திரிய
என்னினம் அழியக் கண்டேனடி
அன்று முதல் இன்றும்
தமிழ்த் தவிக்கக் கண்டேனடி
உயிர்மெய்யில் உயிர்ப்பிரியக் கண்டேனடி
ஆயுதம் இழக்கக் கண்டேனடி

என்று தணியும் எம் தனித் தமிழ்நாட்டுத் தாகம்...

எழுதியவர் : பிரவீன் ராசா (7-Apr-13, 11:36 pm)
பார்வை : 88

மேலே