முதல் புள்ளி.
இடமிருந்து
வலமோ,
வலமிருந்து
இடமோ,
கீழுருந்து
மேலோ,
மேலிருந்து
கீழோ
உன் மனதில்
இடம் கேட்கவில்லை.
உன்
நெற்றி வகிட்டில்
மட்டும்
ஒரே ஒரு
புள்ளியென
என்னை
திலகமாய் இட்டுவிடு
என் ஆசைக்கு
நீ வைக்கும்
முற்றுப்புள்ளியாய்
அல்ல
உன் வாழ்கையை
அலங்கரிக்கப்போகும்
கோலத்தை
தொடங்கும்
முதல் புள்ளியாய்.