பெண்ணின் காதல் !!

(ஒரு பெண் தன் காதல் கணவனுக்கு எழுதும் கவிதை மடல் )

உன் மூச்சு காற்று காதருகே
முத்தமிடுவது பிடிக்கும் !!
மனம் வெட்கம் விட்டு நாள் முழுதும்
கட்டி கொள்ள துடிக்கும் !!

மழலை போல் உன் மடியினிலே
உறங்கிடத்தானே நினைக்கும்!!
உன் மிச்சம் அள்ளி தின்றால்தான்
மண்ணில் என் உயிர் நிலைக்கும் !!

நள்ளிரவில் உன் விரல் பிடித்து
நடப்பது எனக்கு பிடிக்கும் !!
அந்த வெண்ணிலவு நம் இருவரையும்
புகைப்படம் எடுத்திட நினைக்கும் !!

அன்பே எனக்கு ,,
மல்லி அள்ளி தரவேண்டாம்
மனதை கிள்ளி தா போதும் !!
தங்கம் வைரம் தர வேண்டாம்
என் அங்கம் எங்கும் நீ போதும் !!
விண்ணை எனக்கு தர வேண்டாம்
நீ உன்னை எனக்கு தா போதும் !!

இப்போதும் , எப்போதும் என் நெஞ்சுக்கூட்டில் நீ போதும் !!! By
IRFAN ....

எழுதியவர் : இர்பான் (8-Apr-13, 5:25 pm)
பார்வை : 161

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே