என் அவள் முடிவினிலே

விரும்புவதா விலகுவதா

ஏன் இந்த குழப்பம் மனதினிலே

தொடர்ந்திடுமா முடிந்திடுமா

என்றே பயம் வரும் எதிரினிலே...

விரும்பிடுமா வெறுத்திடுமா

எதிர்வரும் பதிலால் நடுக்கத்திலே

தொலைவதும் கிடைப்பதும்

இயல்புதான் காதல் கிறக்கத்திலே

சொர்க்கம் நரகம் இரண்டும் உணர்கிறேன்

கனவுகள் பிறக்கையிலே

வாழ்வா சாவா என்பது தெரியும்

அவளின் முடிவினிலே

என் அவள் முடிவினிலே...

எழுதியவர் : ருத்ரன் (12-May-24, 3:40 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 110

மேலே