இமயம் தொடுவாய்
வீழும் அருவியும் மீண்டெழும்
புதையும் விதையும் துளிர் பெரும்
தன்னம்பிக்கை துணையை நீயும் கொண்டு
இமயம் தொட எழுந்து வருவாய் !
நேற்றைய தோல்வியை காற்றில் விடு
கிடைக்கும் வாய்ப்பை இறுக பிடி
உழைப்பு அதனில் கடுமை காட்டு
ஒய்வு இல்லாமல் உழைத்து வா !
அலட்சியம் அதனை ஓரம் போடு
அறிவுரையில் கொஞ்சம் அனுபவம் தேடு
தோற்றவர்களின் வாழ்க்கையை படித்து பாரு
வெற்றிபெறும் வழி உனக்கு புரியும் !
நேர்மையாய் உழைத்து நீதியை நாட்டு
உயர்வுக்கு வியர்வையை உரமாக்கு
சுகமாய் தெரியும் சோம்பலை நீயும்
ஒதிக்கிவிட்டு உழைக்க பாரு !
இருட்டும் பகலும் விழித்துகொண்டிரு
வெற்றியின் வழியை விரைந்து தேடு
நம்பிக்கை கொண்டு முன்னே செல்லு
கனியும் வெற்றியை ருசித்து பாரு !
தளர்நடை வேண்டாம் தளிர்நடை போடு
உயர்ந்தவரை எல்லாம் உற்று நோக்கு
வெற்றியின் நுணுக்கம் தேடி பிடி
விரைந்து சென்று இலக்கை சேறு !
எதிர்வரும் காலம் இளைஞனின் கையில்
இருப்பதை எண்ணி பெருமைபடு
கடக்கவேன்டிய இலக்குகள் நிறைய
பூமியெங்கும் குவிந்து கிடக்கு !