அன்பின் பொய்கள்

தனக்கான உணவையும் பிள்ளை உண்ண - என்
வயிறு நிறைந்தது என - அம்மா
சொல்வாள் பொய்...

தேநீர் கூட பருகாமல் மீதம் செய்து - மாலை
வரும்போது தின்பண்டம் வாங்கி வந்து-எனகென்ன
இரு தேநீர் பருகினேன் இன்று என - அப்பா
சொல்வார் பொய்....

தான் சாதிப்பதை காட்டி - நம்மை
வெறி கொண்டு சாதிக்க வைத்து பின் - ஒருமுறை தானே மறுமுறை பாப்போம் என - உடன்பிறப்புகள்
சொல்லும் பொய்....

நான் தீட்டிய ஓவியம் காட்டிலும் - உன்
ஓவியம் அழகு என குறைவான - நம்
திறனை உயர்த்தி வைத்து - நண்பர்கள்
சொல்லிடும் பொய்....

அன்பின் இந்த அழகான பொய்களுக்கு நடுவில்
பொய்யான அன்பு தோற்றே போகிறது....

எழுதியவர் : amudha (9-Apr-13, 2:11 am)
Tanglish : anbin poikal
பார்வை : 183

மேலே