வரலாறு படைப்போம்!!

பழைமைச் சாத்திரங்களை
பாடைகட்டி யேற்றுவோம்.
புதுமை ஒழுக்கங்களை
மேடையேற்றிப் போற்றுவோம்.
சிறுமைச் செலவுகளை
சிக்கனத்தில் நிறுத்துவோம்.
வறுமைப் பேய்களை
வம்சத்தை யழித்திடுவோம்.

திருமணச் சடங்குகளை
திருத்தியுமமைத்திடுவோம்.
வரதட்சனைக் கொடுமைகளை
வளராது வேரறுப்போம்.
அருமை இளைஞர்களை
அறவழி பேணச்செய்வோம்.
திருவாளர்ச் சீர்களை
தெளிந்தே தொடருவோம்.

வாழுமுறைக் கல்வியை
வகையுறக் கற்றிடுவோம்.
நாளும் வரும் புதுமைகளை
நயம்பட அறிந்திடுவோம்.
காலமோடும் விரையங்களை
கணக்கிட்டுத் தெளிந்திடுவோம்.
ஞாலமெழுதும் வரலாறுகள்
நமையெழுத உழைத்திடுவோம்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா..

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (8-Apr-13, 9:24 pm)
பார்வை : 121

மேலே