புரட்சிபென்னே
அந்தக்காலம் அடிமைக்காலம் ,
இன்று பிறக்கட்டும் நல்ல நேரம் ,
வீட்டுக்குள்ளே கிடந்த நீ ,
வெளியே கொஞ்சம் எழுந்து வா !
புரட்சிகள் செய்ய பிறப்பெடுத்தவளே
வெள்ளை புடவை வேஷம் எதற்கு
அடையாளம் காட்டும் கொடுமை தன்னை
அடியோடு ஒழிக்க அடியெடுத்து வா !
விதியென்று இருந்த காலம் போதும்
வீதிக்கு வந்து புரட்சி செய் ,
உன்னை துகிலுறிக்க துடிக்கும் துட்சதனங்களை
தோலுரித்து வெய்யிலில் காயப்போடு !
எல்லைகள் தாண்ட பிறந்தவளே
தொல்லைகள் தரும் மடமை தவிர்த்து
ஆணுக்கு இணையாய் நிகரென பயணி !
புரட்சிகள் செய்ய பிறந்தவள் நீ
உன்னை புன்படுத்துபவரை புரட்டிபோடு
சீண்டிப்பார்க்கும் விரல்களை ஒடி
நீந்திவா நீயும் எதிர் நீச்சல் போட்டு !
கள்ளிப்பாலில் இனி உனக்கு கண்டமில்லை
கண்டங்களை தாண்டி சாதிக்க வா
முண்டமாய் போன முட்டாள் சமுதாய
முரண்பாடுகளை நீக்கி கலைந்து வா !
தாய்மை அன்பும் தலைமை பண்பும்
ஆளுமை திறனும் உனக்குள் உண்டு
ஆள பிறந்த பெண்ணே நீ
அடக்கி வாழ்ந்த ஆண் சமுதாயத்தை
அறிந்து வாழவும் கற்றுக்கொள் !
சோதனை காலம் எவர்க்கும் உண்டு
சாதனை நோக்கி பயணம் தொடறு
புவியாள பிறந்த புரட்சிப்பென்னே
பூமியை கொஞ்சம் ஆட்சி செய் !