தாயின் மனம்

எனக்காக நீ அழுதாயோ அம்மா
உறக்கமில்லை ஏனோ எனக்கு
சேயான எனை நீயறிவாய் - அம்மா
உன் சேய் உனையறியாதா !

தேற்றிக்கொள் மனைதை நீயும்
உன்பிள்ளை வாழ்வான் என்று
ஏற்றுக்கொள் என்னை நீயும்
வெற்றிகொண்டான் என்மகன் என்று.

கலங்காதே அம்மா உன் கண்மணி நானே
உயிர்தந்த தாயே உனக்கு துன்பம் தந்தேனோ!
நினைவாலேலே உன் மடியினில் சாய்ந்திருப்பேன்
என்னுயிராலே உந்தன் நிழலையும் நானறிவேன்.

கண்கண்ட தெய்வமே நீ கண்கள் கலங்காதே
என்கைகள் உன்னருகே இல்லை - உந்தன்
கண்ணீரை சிந்தாமல் ஏந்திக்கொள்ள.
வெற்றியோடு வருவேன் நாளை உன்மகனாக.

எழுதியவர் : சிவா (எ) விஜய் (8-Apr-13, 8:25 pm)
Tanglish : thaayin manam
பார்வை : 152

மேலே