காலம் கொடுத்த பாடம் !
காலம் நமக்கு தரவில்லை !
வாழும் காலத்தில் நாம்
மனிதனை பார்த்து தெரிந்து
கொண்டது ..........
பணம் ! இது இருந்தால் போதும்
தேவை இல்லை குணம் !
பணம் இது இருந்தால் போதும்
தேடி வரும் மனம் !
பணம் இருந்தால் போதும்
துதிபவர்கள் தோன்றுவார்கள் தினம் !
பணம் இருந்தால் போதும்
உறவுகள் ஒட்டி கொள்வார்கள் உடன் !
பணம் இருந்தால் போதும்
உடன் பிறப்புகள் புகழ்வார்கள் அக்கணம் !
பணம் !
இது காகிதம் தந்த கனவு
நேர்மையுடன் இதை அடைவது தாமதம்
குறுக்கு வழியில் இது கிடைப்பது சீக்கரம் !
ஸ்ரீவை.காதர்.