காவு கொடுக்காதீர்கள் ......!

வறுமைக்கோடு .....!
உன் வயிர்வரை மட்டுமே தவிர .....!
உன் உயிர்வரை அல்ல ......!

பெண்ணே ....!
உன் கலங்கம்
சமுதாய சாக்கடையில்
சங்கமிட்டு கலந்த
சேறாய் இருந்தால் - கழுவிவிடலாம் ....!
எய்ட்ஸ் என்னும்
திராவகமாக இருந்தால் ..,
தீப்போன்ற இரணத்தை
எப்படி ஆற்றுவாய் ......?

இன்று ....!
நாசமிகு நச்சுக்கார
நயவஞ்சகர்களால் நசுக்கப்பட்ட
நம்பக பூக்களே .....!

காதல் போர்வையில்
கானல் நீரால்
கருக்கலைப்பு செய்யப்பட்ட
அரும்புகளே .......!

வறுமையால்
சிவப்பு விளக்கில்
மங்கி கிடக்கும்
மாற்றான் தோட்டத்து
மங்கைகளே ......!

திசைமாறும் மனிதர்களால்
நிலைமாறும் பூக்களே ....!
இன்றே ....!
புத்துயிர் பெற்று எழுங்கள்
விழிப்புணர்வு என்னும்
விவேகத்தால் ......!

முற்றுப்புள்ளியின் மூலதேவனாம்
காலதேவனுக்கு .....,
காவு கொடுக்காதீர்கள்
உங்கள் கனவுகளை .......!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (8-Apr-13, 7:07 pm)
பார்வை : 97

மேலே