மனுதர்மம் பற்றி
மனு தர்மம் என்பது தற்காலங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பபட்டுள்ளதாகவே அறிகிறோம். உண்மையுருவில் மனு தர்மம் பல சமூக நியதிகளை வகுத்து கொடுத்துள்ளது. குறிப்பாக மனு தர்மத்தில் கொடுக்கப்பட்டுள்ள வர்ணாசிரம தர்மத்தை மையப்படுத்தியே மனு தர்மம் என்னும் மொத்த படைப்பும் விமர்சிக்க படுகிறது. அந்த வர்ணாசிரமத்தை கொஞ்சம் பார்ப்போம்.
ரிஷி பாரத்வாஜரும் பிருகுவும் உரையாடுவதாக அமைந்துள்ளது. சமூகத்தில் கட்டமைப்பை உருவாக்கும்போருட்டு என்னென்ன விஷயங்கள்-செல்வங்கள் ஒரு மனிதனுக்கு அதிகாரத்தை-சக்தியை-வாழ்வாதாரத்தை கொடுக்கிறது என்று வகைபடுத்தினார்கள். அவை,
௧. அறிவு (கல்வி)
௨. ஆயுதம் (போர்-ஆட்சி அதிகாரம்)
௩. செல்வம் (வணிகம்)
௪. நிலம் (விவசாயம்)
இவை ஒரே இடத்தில் குவிவதால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்பதால் ஒருவர் ஒரு செல்வத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது என்றும் முறைப்படுத்தினார்கள். கல்வி அறிவு பெற்று பிரம்ம ஞானத்தை பெற்றவன் பிராமனனாகவும், ஆயுதம் கொண்டு நாட்டை காத்து அதிகாரம் செலுத்துபவன் ஷக்திரியனாகவும், வணிகம் மூலம் செல்வம் தேடுபவன் வைசியன் எனவும் நிலத்தை கொண்டு தானியம் விளைவிப்பவன் சூத்திரன் என்றும் வகைப்படுத்தினார்கள். இவர்களுள் யாரும் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ குறிப்பிடவில்லை. அதே போல், இந்த நால்வரும் தங்களிடம் உள்ள செல்வ அளவால் சமூகத்தில் உயர்ந்த நிலயை அடைய முடியாது, மாறாக ஒருவர் தனது செல்வத்தால் எவ்வளவு நல்விஷயங்களை செய்தார், அவரது ஈகை-தியாகம் போன்றவற்றின் மூலமே அவரது அந்தஸ்து தீர்மானிக்கபடுகிறது. சிறந்த உதாரணம் சடையப்ப வள்ளல் என்னும் வேளாளர் கம்பரால் சோழனினும் உயர்வாக பேசப்பட்டவர்.
பிறப்பால் இந்த வர்ணங்கள் தீர்மானிக்கபடவும் இல்லை. ஏனெனில் வால்மீகி மகரிஷியோ, வியாசரோ, காளிதாசரோ, ரிஷி விஸ்வாமித்ரரோ பிறப்பால் பிராமணர் அல்ல. ஆனால் இவர்கள் மிகவும் போற்றப்பட்ட பூஜிக்கபட்ட மகான்கள். இவை தான் உண்மை மனுசாஸ்திரம். அதற்கு மேல்பட்டு சொல்லப்பட்டவைகள் இடைசெறுகல்களும் திரிபுகளுமேயாகும்.
இந்திய பாரம்பரிய அறிவியல் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களை கற்றும் போதித்தும் வந்தவர்கள் பிராமணர்கள். கிறிஸ்தவ மதம் பரப்ப முதலில் இந்தியர்கள் தங்களை தாழ்வாக-மேற்கு நாடுகளை உயர்வாக எண்ண என்பதால் இந்திய அறிவையும் ஆன்மீகத்தையும், உண்மையான வரலாற்றையும் அழிக்க பிராமணர்களை மக்களுக்கு எதிரிகளாக சித்தரிக்க ஏவப்பட்ட பல ஆயுதங்களில் ஒன்றுதான் இந்த மனுதர்ம பிரச்சனை. இதே திராவிட தீய சக்திகள் சமூகத்தில் சமதர்மம் பரப்புகிறேன் என்று அரசியல், தொழில், நிலங்கள் என அனைத்தையும் பறித்துக்கொண்டு யாரையும் நல்ல கல்வியும் கற்க விடாது மெக்காலே கல்வி திணிக்கப்பட உறுதுணையாய் இருந்தார்கள்.