மனம்
நான் அனைத்தும் தெரிந்தவன் !
அனைத்தும் கற்றவன் !
நான் இல்லை என்றால்
உன்னால் வாழ முடியாது !
நான் இல்லை என்றால் அன்பு
என்ற வார்த்தைக்கே இடம் இல்லை !!!
நான் சொல்வதை கேட்க மறுத்தவனுக்கு
தோல்வி!!!!
நான் சொல்வதை மட்டும் கேட்பவனுக்கு
வெற்றி !!!
மொத்தத்தில் உங்கள் அனைவருக்கும்
நான் தான் உலகம் ............
என்னை முறையாக பயன்படுத்தியவனுக்கு
நல்லவன் என்று பெயர் !!!
பயன்படுத்தாதவனுக்கு
தீயவன் என்று பெயர் !!!
என்னிடம் இருந்தே காதல் பிறக்கிறது!!!
அது என்னை மறந்த நேரத்திலே
தோல்வியில் முடிகிறது !!!
என் பெயர் "மனம்" .......!!!

